வாக்களிக்க சென்ற வீராங்கனையின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து மாயம்! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் ஒரே கட்டமாக இன்று நடைபெற்று வருகிறது. 119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

வாக்குபதிவின்போது ஏதும் அசம்பாவிதம் நடைபெறக்கூடாது என்பதற்காக காவலர்கள் மற்றும் மத்திய துணை ராணுவ படையினர், மேலும் பிற மாநிலங்களை சேர்ந்த காவலர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பில் ஈடுபட்டுவருகின்றனர். ஐதராபாத் மற்றும் செகந்திராபாத் பகுதிகளில் மட்டும் சுமார் 10000 காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக சினிமா பிரபலங்கள் என பலரும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கானாவை சேர்ந்தவரும், பிரபல பேட்மிண்டன் வீராங்கனையுமான ஜ்வாலா கட்டா தனது வாக்கை செலுத்துவதற்கு  தேர்தல் பூத்துக்கு சென்றார். பின்னர், அவர் வாக்களிக்க சென்றபோது அவருடைய பெயர் வாக்காளர் பட்டியலில்  இல்லை அதிகாரிகள் தெரிவித்ததை கேட்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர், இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், 'என்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தேன். இது போல் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் மயமாகி போனால் எப்படி தேர்தல் ஜனநாயக முறையில் நடக்கும்?, நியாயமாக எப்படி தேர்தல் நடக்கும்?, என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

English Summary

The name of the last lady to vote is from the electoral roll magic!


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal