மழையால் மாற்றி அமைக்கப்பட்ட இலக்கு! வெற்றி பெறுமா பாகிஸ்தான்!  - Seithipunal
Seithipunal


இன்றைய உலகக்கோப்பை போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. லோகேஷ் ராகுல் 57, ரோஹித் சர்மா 140, கோலி 77 ரன்கள் எடுக்க 50 ஓவர் முடிவில் இந்தியா அணி 336 ரன்களை அடித்துள்ளது. 

337 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர பவுலர்களான புவனேஷ்வர், பும்ரா நேர்த்தியாக பந்துவீசினார்கள். 

பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் இமாம் உல் ஹக், பாக்கர் ஜமான் நிதானமாக விளையாடினார்கள். ரன்ரேட் பெரிதாக செல்லவில்லை என்றாலும் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். 5 ஆவது ஓவரை புவனேஷ்வர் வீசிக்கொண்டிருக்கும் போதே, ஆடுகளம் வழுக்கியதால் காயமடைந்து வெளியேறி அதிர்ச்சி அளித்தார். 

அவர் காயம் பெரியதாக இருப்பின் இந்திய அணிக்கு நிச்சயமாக பின்னடைவாகவே இருக்கும். புவனேஷ்வர் வெளியேறியதால் அந்த ஓவரை நிறைவு செய்ய உலகக்கோப்பை போட்டியில் முதல்முறையாக களமிறங்கியுள்ள தமிழகத்தின் விஜய் ஷங்கர் அழைக்கப்பட்டார். 

அவர் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி இந்திய அணியினருக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தார். விக்கெட் விழுந்ததை பார்த்து இந்திய வீரர்கள் அனைவரும் நம்பமுடியாத குதூகலத்தில் மிதந்தார்கள். 

அதன்பிறகு மிகப்பெரிய 100 ரன்கள் பார்ட்னர்சிப்பை கொடுத்து இந்திய வீரர்களை பதறவிட்டார்கள் பாகிஸ்தானின் பக்கர் ஜமான், பாபர் அசாம் இணை. இந்த இணையை குல்தீப் யாதவின் துல்லியமான பந்தில் தான் பிரிக்க முடிந்தது. 

குறுகிய இடைவெளியில் பாண்டியா, குல்தீப் தலா 2  விக்கெட்டுகளை வீழ்த்த பாகிஸ்தானின் வீழ்ச்சி ஆரமபம் ஆனது. பின்னர் வந்த விஜய் ஷங்கர் பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அஹமதை வெளியேற்றினர். 

இதனிடையே ஆட்டம் மழையால் தடைபட, 35 ஓவரில் 166 ரன்களை எடுத்திருந்த பாகிஸ்தானுக்கு, 40 ஓவரில் 302 ரன்கள் எடுக்கப்பட வேண்டும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் இந்தியாவின் வெற்றி உறுதியானது. 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

target changed by DLS method Due to rain


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
Seithipunal