நாங்க ஜோடி ஜோடியாக தான் அறிமுகம் ஆவோம்! விசித்திரமான தமிழக வீரர்களின் டெஸ்ட் எண்கள்! - Seithipunal
Seithipunal


இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியானது இன்று பிரிஸ்பேனில் தொடங்கியது. இந்த போட்டிக்காக இந்திய அணி  ஆடும் லெவனை தேர்வு செய்வதில் மிகப் பெரிய சிரமம் ஏற்பட்டது. 

கடந்த போட்டியில் விளையாடிய ரவீந்திர ஜடேஜா ரவிச்சந்திரன் அஸ்வின், ஹனுமா விஹாரி, ஜஸ்பிரிட் பும்ரா  இந்த போட்டியில் விளையாடவில்லை. அவர்களுக்கு மயங்க் அகர்வால் தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன், தாக்கூர் ஆகிய 4 பேரும் அணியில் இணைந்துள்ளனர். தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் இருவருமே தமிழக வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதில் நடராஜனின் டெஸ்ட் எண் 300 ஆகும். வாஷிங்டன் சுந்தர் டெஸ்ட் எண் 301 ஆகும். இதேபோல, தமிழக வீரர்களின் டெஸ்ட் எண் ஆனது அருகருகே அமைந்துள்ளது தெரிய வந்துள்ளது. 

முன்னதாக 153 ஆவது வீரராக ஸ்ரீனிவாசன், 154 ஆவது வீரராக கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அறிமுகமாகியுள்ளனர். அதன்பிறகு 163 ஆவது வீரராக சேகர் , 164 ஆவது வீரராக லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் அறிமுகமாகியுள்ளனர்.

அதன்பிறகு 218 ஆவது வீரராக ராபின் சிங், 219 ஆவது வீரராக சடகோபன் ரமேஷ் அறிமுகமாகியுள்ளனர். அதன்பிறகு 270 ஆவது வீரராக அபினவ் முகுந்த், 271 ஆவது வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிமுகமாகியுள்ளனர்.

கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகும் போது, வீரர்களுக்கு எண் ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu players test numbers


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->