தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு தடை! பிசிசிஐ சிஓஏ அதிரடி நடவடிக்கை!  - Seithipunal
Seithipunal


பிசிசிஐ தேர்தலில் பங்கேற்க தமிழ்நாடு, ஹரியாணா, மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கங்களுக்குத் தடை விதித்து சிஓஏ கமிட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. 

பிசிசிஐ நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் ஆனது அக்டோபர் 23ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மூன்று முக்கிய கிரிக்கெட் சங்கங்களான தமிழ்நாடு, ஹரியாணா, மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கங்கள் பங்கேற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் நியமித்த நிர்வாகக் கமிட்டி அதிரடியாக அறிவித்துள்ளது. 

பிசிசிஐ புதிய விதிமுறைகளுடன் இந்த 3 கிரிக்கெட் சங்கங்களும் ஒத்துவராமல் தன்னிச்சையாகச் செயல்பட்டதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக அவர்கள் கொடுத்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என்றும் விநோத் ராய் தெரிவித்தார். 

இந்த தடையால் பிசிசிஐ கிரிக்கெட் நிர்வாகம், ஆட்சிக்குழு, பிசிசிஐ பொதுக்கூட்டம் ஆகியவற்றில் வாக்களிப்பது உட்பட அனைத்திலும் இருந்தும் இந்த மூன்று சங்கங்களும் தடை செய்யப்படுவதாக சிஓஏ தெரிவித்துள்ளது.

இதற்குப் பதிலடியாக இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சங்கத்தின் தலைவராக இந்தியா சிமெண்ட்ஸ் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் நீண்ட நாட்களாக இருந்த நிலையில், தற்போது அவருடைய மகள் ரூபா குருநாத் தலைவராக அவர்களே போட்டியின்றி தேர்வு செய்து கொண்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu cricket association banned by CAO


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->