சற்று முன் #BCCI அதிகாரபூர்வ தகவல்.? தோனி நிரந்தர ஒய்வு.? மற்ற இரு வீரர்கள் அதிரடி நீக்கம்.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி வரை போராடி தோற்ற நிலையில், உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்கள் பலரும் காயத்தின் காரணமாக பாதிக்கப்பட்டனர். மேலும், இந்திய அணியின் பந்துவீச்சு ஜாம்பவான்கள் கூட இங்கிலாந்து மண்ணில் சற்று ஆடித்தான் போயினர்.

பந்து வீச்சுக்கு சாதகமான மண்ணாக இங்கிலாந்து இல்லை என்பது பலரின் கருத்தாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பல்வேறு விதமான முடிவுகளை எடுப்பதில் கேப்டன் கோலி திண்டாடி வருகிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. அணியின் வீரர்கள் அடிக்கடி மாற்றப்பட்டு இந்த உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்தது.

ravi shastri, kohli seithipunal

இந்திய அணியின் தோல்வி குறித்து பிசிசிஐ மறு ஆய்வு செய்வதற்கான ஆயத்த வேலைகளை தற்போது தொடங்கியுள்ளது. தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து ரவி சாஸ்திரி மற்றும் கோலியிடம் கேள்வி எழுப்ப போவதாக முன்னதாகவே அறிவித்திருந்தனர்.

rohith sharma, seithipunal

இந்நிலையில் 20 ஓவர் உலக கோப்பை தொடர் குறித்த தகவல் தற்போது வெளியாகி வருகின்றது. இந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆனது ரோஹித் சர்மாவின் தலைமையில் நடைபெறும் என்றும், ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கும் என்றும், சில தகவல்கள் வெளியாகி வருகின்றது. மூன்று நாள் ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் நடக்க இருப்பதாகவும் எனவும் கூறப்படுகிறது.

dhoni kholi, bumrah kholi, seithipunal

மேலும், இந்த போட்டியில் தோனி நிரந்தர ஓய்வை அறிவிப்பார் என்றும், அல்லது நீக்கப்படுவார் என்றும் சில தகவல்கள் வெளியாகி வருகிறது, மேலும் கோலி மற்றும் பும்ரா ஆகியோருக்கு இந்த தொடரில் தற்காலிக ஓய்வு கொடுக்கப்படும் என அந்த தகவல் கூறுகிறது. இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்படி இருந்தாலும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி பல்வேறு விதமான மாற்றங்களை சந்திக்கும் என்பது அசைக்க முடியாத கருத்து தான்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 world cup match new announcement


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->