உலக கோப்பை டி20 : பாகிஸ்தான் அணி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை டி20 தொடர் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ளது.

இந்த டி20 போட்டியில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இதில், இந்திய அணி குரூப்-2 ல் இடம் பெற்றுள்ளது. இந்த குரூப் இரண்டில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.

குரூப் ஒன்றில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட்இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த 8 அணிகளும் நேரடியாக இரண்டாவது சுற்றில் இருந்து விளையாடும். முதல் சுற்று தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

இந்த உலகக் கோப்பை டி20 தொடருக்கான தொடரில் விளையாடக்கூடிய ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணி வீரர்கள் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இன்று பாகிஸ்தான் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி விவரம் : 
பாபர் அஸாம், 
ஷதாப் கான் (துணை கேப்டன்), 
முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), 
ஆசிப் அலி, சோயிப் மக்சூட், 
அஸாம் கான் (விக்கெட் கீப்பர்), 
குஷ்தில் ஷா, 
முகமது ஹபீஸ், 
முகமது வாசிம் ஜூனியர், 
ஷாஹீன் அப்ரிடி, 
ஹாரிஸ் ராஃப், 
ஹசன் அலி, 
இமாத் வாசிம், 
முகமது ஹஸ்னைன் இடம்பெற்றுள்ளனர். மேலும்,  உஸ்மான் காதர், ஷாநவாஸ் தானி, ஃபகார் ஸமான் ஆகியோர் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

t 20 world cup Pakistan team announce


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->