சிக்ஸர்களை பறக்கவிட்ட சூர்யா அபார ஆட்டம்! மேக்ஸ்வெல் சாதனையை தகர்த்தார்!  - Seithipunal
Seithipunal


தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியுடானான இரண்டாவது போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் அதிரடியில் வெளுத்து வாங்கியதுடன், சாதனை மேல் சாதனைகளை படைத்தார். 

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது போட்டி நடைபெறும் மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என அனைவராலும் சொல்லப்பட்டது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக பிட்ச் ரிப்போர்ட்டில் முதலில் விளையாடும்போது பந்துவீச்சு எடுபடும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதனை பொய்க்கும் விதமாக இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கியது. 

இந்தியாவின் தொடக்க ஜோடி ரோகித் சர்மா 43 ரன்கள் எடுத்திருந்தபோது பிரிந்தது. அவர் 37 பந்துகளில் 43 ரன்களை  குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த கே எல் ராகுல் 28 பந்துகளில் 57 ரன்கள் விளாசினார். 

பின்னர் வந்த விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் விளாசி தள்ளினார்கள். அதிவேகமாக அரை சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை சூர்யா பெற்றார். அவர் 18 பந்துகளில்  அரை சதம் அடித்தார். முன்னதாக இந்திய தரப்பில் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரை சதம் அடித்த வீரர் என்ற சிறப்பை வைத்திருக்கும் நிலையில், அதுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் கே எல் ராகுலுடன் இரண்டாவது இடத்தினை சூரியகுமார் பகிர்ந்து கொண்டார். 

டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக 50 ரன்களை கடந்தது:

12 - யுவராஜ் v Eng, 2007
18 - KL ராகுல் v Sco, 2021
18 - சூர்யகுமார் யாதவ் v SA, இன்று
19 - கம்பீர் v SL, 2009
20 - யுவராஜ் V Aus, 2007
20 - யுவராஜ் v SL, 2009

முன்னதாக இதே ஆட்டத்தில் T20 போட்டிகளில் மொத்தமாக ஆயிரம் ரன்களை அவர் கடந்தார். பந்துகள் எண்ணிக்கைப்படி அதி வேகமாக அவர் ஆயிரம் ரன்கள் என்ற சாதனையை பெற்றிருக்கிறார். முன்னதாக ஆஸ்திரேலிய அணி மேக்ஸ்வெல் 604 பந்துகளில் 166 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆயிரம் ரன்களை கடந்தது சாதனையாக இருந்த நிலையில், சூரியகுமார் யாதவ் 573 பந்துகளிலேயே 174 ஸ்ட்ரைக் ரேட்டுடன் இந்த சாதனையை படைத்திருக்கிறார். அவர் 22 பந்துகளில் தலா 5 பவுண்டரி, சிக்ஸர்களுடன்  61 ரன்கள் எடுத்து துரதிஷ்டவசமாக ரன் அவுட்டானார்.

டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக 50 ரன்களை கடந்தது:

12 - யுவராஜ் v Eng, 2007
18 - KL ராகுல் v Sco, 2021
18 - சூர்யகுமார் யாதவ் v SA, இன்று
19 - கம்பீர் v SL, 2009
20 - யுவராஜ் V Aus, 2007
20 - யுவராஜ் v SL, 2009

573 சூர்ய குமார் யாதவ் (SR 174) *
604 க்ளென் மேக்ஸ்வெல் (SR 166)
635 கொலின் முன்ரோ (SR 157)
640 எவின் லூயிஸ் (SR 156)
654 திசர பெரேரா (SR 153)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Surya kumar yadav new record in t20 international


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->