யுவராஜிற்கு இங்கிலாந்து பவுலரின் சர்ப்ரைஸ்.! அரங்கேறிய ருசிகர சம்பவம்.! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். 

யுவராஜ் சிங் இங்கிலாந்துக்கு எதிராக ஒரே ஓவரில் 6 சிக்ஸ் அடித்தது. உலகக் கோப்பை 2011 போட்டியை வென்றது. இவர் எட்டாத சாதனையே கிடையாது. உலகக் கோப்பையில் வென்று சில மாதங்களில் இவருக்கு கேன்சர் இருப்பது தெரிந்தது. இதனால் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து சிறிய இடைவேளை  எடுக்க போவதாக அறிவித்தார். ஆனால், அது அவரின் கிரிக்கெட்  வாழ்க்கையில் மிகப்பெரிய இடைவேளை ஏற்படுத்தியது.

ஒரு வருடம் யுவராஜ் சிங் சிகிச்சை பெற்றார். அதன்பின் முழுவதுமாக குணம் அடைந்து மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார். அவர் பயிற்சிக்கு பின்னர் இந்திய அணியில் நிரந்தரமாக இடம் கிடைக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். 

இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பிராட், "ஓய்வெடுங்கள் லெஜெண்ட்" என யுவராஜ் சிங்கிற்கு தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார். இத்துடன் யுவராஜும், ஸ்டூவர்ட் பிராடும் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

இதில் ரசிக்கத் தக்க விஷயம் என்னவென்றால் யுவராஜ் சிங் அடித்த அந்த ஆறு சிக்ஸர்களின் பந்துவீச்சுக்கு சொந்தமானவர் ஸ்டூவர்ட் பிராட் என்பவர் குறிப்பிடத்தக்கது. இதனாலேயே அவரது வாழ்த்தினை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். 

English Summary

stuart brad surprise to yuvaraj


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal