''அணியாக பேட்டிங்கில் இன்னும் சிறந்து விளங்கவில்லை''..! விராட் கருத்து..! - Seithipunal
Seithipunal


இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் வியாழக்கிழமை தொடங்கவுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் ஒரு பகுதியாக உள்ளது. ஆகவே இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் போட்டியில் களமிறங்க உள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து விராட் கோலி தெரிவித்த கருத்தில், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அறிமுகத்திற்குப் பிறகு டெஸ்ட் போட்டிகள் மிகவும் கடினமாக இருக்கும். இந்த சாம்யின்ஷிப் போட்டிகள் சரியான நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் சுவராஸ்யமாக இல்லை என்று ரசிகர்களுக்கு தோன்றும். என்னைப் பொறுத்தவரை கடந்த இரண்டு ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளின் தரம் மிகவும் உயர்ந்துள்ளது.

மேலும் இந்திய அணியில் பேட்ஸ்மேன்களாக அனைவரும் ஒன்றிணைந்து சரியாக விளையாடவில்லை. தனியாக ஒரு சில வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும் ஒரு அணி என்னும் முறையில் சிறந்து விளையாடவில்லை.

டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் செய்வது கொஞ்சம் கடினம் தான். தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் வந்திருப்பதன் மூலம் பேட்டிங் இன்னும் சவாலாக இருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு முடிவும் அணியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்பதால் பேட்டிங் முக்கியத்துவமானதாகும் என தந்து கருத்தை தெரிவித்துள்ளார் கேப்டன் கோலி. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

still not great in bating as a team


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->