உலக கோப்பைக்கான இந்திய அணியில் திடீர் சர்ப்ரைஸ்!  இங்கிலாந்து பறக்கும் அம்பத்தி ராயுடு, பாண்ட்!  - Seithipunal
Seithipunal


உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்பத்தி ராயுடு மற்றும் விக்கெட் கீப்பர்  ரிஷப் பாண்ட் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக விஜய் சங்கர் மற்றும் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றனர். விஜய் சங்கர் அணியில் இணைக்கப்பட்டது பலத்த சர்ச்சையை உண்டாக்கியது. பல முன்னாள் வீரர்கள் எதிர்ப்பும் வரவேற்பும் தெரிவித்து இருந்தார்கள். அதிலும் அணியில் இடம் கிடைக்காத வீரர் அம்பத்தி ராயுடு விஜய் ஷங்கரை கிண்டல் செய்யும் விதமாக தனது ட்விட்டரில் ஒரு பதிவையும் பதிவிட்டு இருந்தார். 


அதாவது தேர்வுக்குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் அணி தேர்வு செய்தபோது விஜய் சங்கர் குறித்து பேசுகையில், அவர் ஒரு முப்பரிமாண வீரர் ஒரு சிறந்த பில்டர், சிறந்த பந்துவீச்சாளர், சிறந்த பேட்ஸ்மேன் நம்பர் 4 இடங்களில் இறங்கி  பேட் செய்யக் கூடியவர் என்ற முப்பரிமாண திறமையை உடையவர் என்பதால் அவரை தேர்வு செய்தோம் என்று விளக்கம் அளித்திருந்தார். இந்த முப்பரிமாணம் என்பதனை கேலி செய்யும் விதமாக அம்பத்தி ராயுடு "நான் ஒரு புதிய முப்பரிமாணக் கண்ணாடி வாங்கி உள்ளேன் உலக கோப்பை போட்டிகளை பார்ப்பதற்காக" என்று ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். 

படம் : கலீல் அஹமத், ஆவேஸ் கான், தீபக் சாஹர் 

அம்பத்தி ராயுடுக்கு ஆதரவாக முன்னாள் வீரர் கௌதம் கம்பீரும் குரல் கொடுத்திருந்தார். அதேபோல பாண்ட் நீக்கம் குறித்தும் உலகின் பல வீரர்களும் ஆச்சரியமளிப்பதாக, அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்திருந்தனர், இந்நிலையில் 15 பேர் கொண்ட அணி இல்லாமல் இங்கிலாந்து நாட்டில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் இருக்கும் என்பதால் இந்திய வீரர்கள் பயிற்சி பெறும் விதமாக நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை அனுப்பி வைக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. 

அதன்படி தற்போது ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் பெங்களூரு அணியின் நவ்தீப் சைனி, சென்னை அணியின் தீபக் சாகர், டெல்லி அணியின் ஆவேஷ் கான், ஹைதராபாத் அணியின் கலீல் அஹமட் ஆகியோர் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணி அல்லாமல் அவர்களுக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது வேறு ஏதேனும் சொந்த காரணங்களால் திடீரென விலக நேரிட்டால் அவர்களுக்கு பதிலாக விளையாடக்கூடிய அணில் உடனடியாக தேர்வு செய்யப்படக்கூடிய ஸ்டாண்ட் பை வீரர்களாக மூன்றுபேரை இந்திய அணி அறிவித்துள்ளது.

அந்த மூன்று பேரில் அணியில் இடம் பெறாமல் அதிர்ச்சியில் இருந்த அம்பத்தி ராயுடு, ரிஷப் பாண்ட் மற்றும் அந்த நான்கு வேகப்பந்து வீச்சாளர்களில்  ஒருவரான  நவ்தீப் சைனி ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். தற்போது 15 பேர் கொண்ட அணியில் யாரேனும் காயமடைந்தோ அல்லது வேறு காரணங்களாலோ விலக நேரிட்டால், அவர்களுக்காக இவர்கள் களம் அணியில் எப்போதும் இணைக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ராயுடு, பாண்ட், சைனிக்கு அதிஷ்டம் இருந்தால் அணியில் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

படம் : நவ்திப் சைனி

இதனை அடுத்து  பயிற்சி வேகப்பந்துவீச்சாளர்களாக  சென்னை அணியின் தீபக் சாகர், டெல்லி அணியின் ஆவேஷ் கான், ஹைதராபாத் அணியின் கலீல் அஹமட்  அழைத்துச் செல்லப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 21 வீரர்கள் இங்கிலாந்திற்கு பறக்கிறார்கள். ஜூலை 5ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை இந்திய அணி சந்திக்கிறது. 

English Summary

standby indian players for icc worldcup 2019


கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
Seithipunal