SRH கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னர் விலக்கல்.! புது கேப்சன் இவரா.?! - Seithipunal
Seithipunal


கடந்த 29ம் தேதி சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் தோல்வியை அடைந்தது. இதற்கு காரணம், தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் தான் என்று கூறப்பட்டது. ஓப்பனிங்கில் அதிக பந்துகளை அவர் விரையம் செய்ததுதான் தோல்விக்கு காரணம் என்று விமர்சனத்திற்கு உள்ளானது. 

இதுகுறித்து, பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னரின் ஆட்டமுறை முற்றிலும் சரி இல்லை. அவர் எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் ஆடி இருக்கவேண்டும். கேப்டனாக டேவிட் வார்னர்க்கு அதிக ரேட்டிங் கொடுக்க முடியாது. 

சென்னை அணியின் ஓபனிங் பேட்டிங்கை உடைக்க சில விஷயங்களை வார்னர் செய்திருக்க வேண்டும். ஆனால், அவர் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை. இதுவே வில்லியம்சன் கேப்டனாக இருந்திருந்தால் இந்த ஆட்டம் வேறு மாதிரி இருந்திருக்கும்.' என்று தெரிவித்தார். 

இத்தகைய சூழலில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக தற்போது கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டிருக்கிறார். 

நாளை ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கேன் வில்லியம்சன் கேப்டனாக பங்கேற்க இருக்கிறார். இதனை ஹைதராபாத் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

srh captain changed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->