டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு இவர் தான் கேப்டன்.! வெளியான அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்துவரும் டி காக், தற்போது டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2020- 21ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் தொடர்களுக்கு டி காக் கேப்டனாக இருப்பார் என்று, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த 2020 -21 ஆம் ஆண்டுக்கான 7 டெஸ்ட் ஆட்டங்களை தென் ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் ஆட்டங்களை கொண்ட தொடரும், இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக தலா 2 டெஸ்ட் ஆட்டங்களும் என தென் ஆப்பிரிக்க அணி 2020- 21ஆம் ஆண்டி விளையாடவுள்ளது.

இந்நிலையில், நடக்கவுள்ள டெஸ்ட் தொடரில் தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக டி காக் கேபிட்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் தலைமையிலான டெஸ்ட் கிரிக்கெட் அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்.

வரும் ஜனவரி -பிப்ரவரி மாதங்களில் பாகிஸ்தானில் இரண்டு டெஸ்ட் போட்டிகள், 3 டி20 ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி விளையாட உள்ளது என, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்து, அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த தொடர்கள் வரும் ஜனவரி 26ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி மாதம் 14ம் தேதி முடிவடைய உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

south africa test match de kock


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->