ஒருநாள் போட்டிகளுக்கு இனி இவர்தான் கேப்டன்.! கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியை தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி அபாரமாக வெற்றி பெற்றது. நான்காவது டெஸ்ட் போட்டி வருகிற 24-ஆம் தேதி (நாளை) ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற உள்ளது. 

இந்நிலையில் ஒருநாள் போட்டிகளுக்கான தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக குவின்டன் டி காக் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இரு டி20 போட்டிகள் மற்றும் 2 ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக இருந்துள்ளார்.

இதுவரை 115 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். குவின்டன் டி காக் 14 சதம் மற்றும் 24 அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். இதுவரை இவர் அதிகபட்ச ரன் எடுத்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடி 178 ரன்கள் ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

south africa one day match captain for quinton de kock


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->