ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து! பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த ஒன்மேன் ஆர்மி கங்குலி!   - Seithipunal
Seithipunal


இந்தியா பாகிஸ்தான் இலங்கை வங்கதேசம் அணிகள் விளையாடும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆனது இந்த வருடம் நடைபெறவிருந்த நிலையில், அந்த தொடரானது ரத்து செய்யப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 

ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகள் இடையே நடைபெறும் கிரிக்கெட் தொடர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி. இந்த வருடம் நடைபெற வேண்டிய தொடருக்கான உரிமை பெற்றிருந்தது பாகிஸ்தான். அங்கு சென்று விளையாடுவதற்கு இந்தியா ஒப்புக்கொள்ளவில்லை. நடுநிலை இடமான UAE யில் போட்டியை நடத்துவதற்கு இந்தியா சம்மதித்தது. அங்கு சென்று விளையாடுவதில் தயக்கம் இல்லை என இந்தியா ஒப்புதல் அளித்தது. செப்டம்பர் மாதம் ஆனது இந்த போட்டித் தொடர் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 

அதேசமயம் ரத்து செய்யப்பட்டது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எங்களுக்கு எதுவும் தெரியாது என தெரிவித்து விட்டனர். இது தொடர்பாக நேற்று சமூக வலைத்தளத்தில் பேசிய பொழுது எங்களுக்கு அடுத்தடுத்து தொடர்கள் இருக்கிறது. இதனால் நாங்கள் போட்டியை ஒத்திவைத்து பிறகு விளையாடுவதற்கு வாய்ப்பு இல்லை அதனால ஆசிய கோப்பை போட்டி ரத்தாகும் என தெரிவித்துள்ளார். 

அதேபோல் அடுத்த 20 ஓவர் உலக கோப்பை போட்டி எப்போது நடக்கும் என முழுமையான விவரங்கள் இதுவரை தெரியவில்லை. 20 ஓவர் உலக கோப்பை போட்டி ஒத்திவைக்கப்படுகிறது அல்லது ரத்து செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்து ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என்பதை முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியை நடத்த சாதகமான சூழ்நிலை வரும்போது இந்தியாவில் மும்பையில் அல்லது UAE இல் நடத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் கங்குலி தெரிவித்துள்ளார். இன்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும். போட்டி தொடர் ரத்து ஆனால் போட்டியை நடத்த இருந்த பாகிஸ்தானுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும் எனபது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sourav Confirms asia cup cancelled


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->