சுப்மன் கில் வெற்றிகரமான கேப்டனாக தொடர்வார்! கடினமான அந்த சோதனையில் சாதித்தவர் சுப்மன் கில்-கங்குலி - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.இந்த தொடரின் முதல் டெஸ்ட் நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது.சுப்மன் கில் தலைமையில் களமிறங்கும் இளம் இந்திய அணிக்கு, உலக டெஸ்ட் சாம்பியன்களான தென்னாப்பிரிக்கா கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த சொந்த மண்ணிலான தொடரில் இந்தியா 3–0 என வெள்ளைத் துடைத்த தோல்வியை சந்தித்தது.அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுடனான தொடரிலும் இந்தியா தோல்வியைச் சந்தித்தது.

இந்த தொடருக்குப் பிறகு மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர்.
இதனால் புதிய தலைமுறைக்குத் திசை காட்டும் நோக்கில், சுப்மன் கில் இந்தியா டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அவர் கேப்டனாக நியமிக்கப்பட்ட போது பலரும் “அனுபவமில்லாத கேப்டன்” என்று விமர்சித்தனர்.ஆனால் இங்கிலாந்தில் நடந்த கடினமான தொடரில், கில் தலைமையிலான இளம் இந்திய அணி 2–2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து வரலாற்று சாதனை படைத்தது.

இங்கிலாந்தின் சவாலான பிச்சுகளில் கில் 954 ரன்கள் குவித்து,தனிப்பட்ட முறையிலும் அசத்தினார்.அவரது ஆட்டம் இந்தியாவை வெற்றிப்பாதையில் இட்டுச் சென்றது.

முன்னாள் கேப்டனும் பிசிசிஐ முன்னாள் தலைவருமான சௌரவ் கங்குலி,சுப்மன் கில் தலைமையைக் குறித்து பெரிதும் பாராட்டியுள்ளார்.

அவர் கூறியதாவது:“சுப்மன் கில் நன்றாக விளையாடுகிறார். அவர் சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்ல, நல்ல கேப்டனும் ஆவார்.
இங்கிலாந்தில் இளம் வயதில் சென்று இந்தியாவை டெஸ்ட் கேப்டனாக வழிநடத்துவது எளிதானது இல்லை.ஆனால் அவர் அதனை வெற்றிகரமாகச் செய்தார்.எதிர்காலத்திலும் கில் இந்தியாவுக்காக சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன்.”

இங்கிலாந்து தொடருக்குப் பிறகு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் கில் தலைமையிலான இந்திய அணி 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.இந்த தொடருக்குப் பிறகு, இந்தியா 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறும் நோக்கில் தன்னுடைய இலக்கை நோக்கி நகர்கிறது.

தற்போது நடைபெறும் தென்னாப்பிரிக்கா தொடர் முடிந்தவுடன்,இந்திய அணி நியூசிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் லீக் தொடருக்கு பயணம் செய்யவுள்ளது.அங்கு உள்ள மைதான சூழல், வானிலை மற்றும் வேகப்பந்து பிட்சுகள் இந்திய அணிக்கு கடுமையான சோதனையாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற மூத்தோருக்குப் பிறகுஇந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தும் சுப்மன் கில்,அவரது இளம் வயதிலும் மெருகேறிய தலைமைத்திறனாலும் இந்திய டெஸ்ட் அணியின் புதிய முகமாக உருவெடுத்து வருகிறார்.தென்னாப்பிரிக்கா தொடரில் அவர் எப்படிப் போராடுகிறார் என்பதைஇப்போது உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shubman Gill will continue to be a successful captain Shubman Gill Ganguly was the one who achieved in that difficult test


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->