பாகிஸ்தான் போட்டியின் போது நடந்த அதிர்ச்சி சம்பவம்.! இந்திய அணியின்  வீரர் மீது வழக்கு.!  - Seithipunal
Seithipunal


சர்ச்சைக்குரிய ட்வீட்டர் பதிவால் ஹர்டிக் பாண்டியா மீது வழக்கு தொடுத்த WWE  பிராக் லெஸ்னர். இதற்கு ஹர்டிக் பாண்டியா மறுத்துள்ளார்.

பிராக் லெஸ்னரின் வக்கீல்பால் ஹேமன்  தற்போது இந்தியன்எக்ஸ்பிரஸ் இணையதளத்துக்கு பேட்டி அளித்தார் அதில் உண்மையாகவே தான் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக கூறி இருக்கிறார். 

இதில் நடந்தது என்னவென்றால் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தின்போது போது சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். அவர் இந்திய கிரிக்கெட் வீரர்  ஹர்திக் பாண்டியாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டார்.

நடிகர் ரன்வீர் சிங் ட்விட்டரில் பதிவில், "சாப்பிடு. தூங்கு. ஆதிக்கம் செலுத்து. திரும்ப செய். (Eat. Sleep. Dominate. Repeat) என குறிப்பிட்டு இருந்தார். இந்த நான்கு வார்த்தைகளில் மூன்று வார்த்தைகள் தான் சர்ச்சைக்கு காரணம் என தெரிகிறது. 

அந்த வார்த்தைகள் பிராக் லெஸ்னர் குறித்து ரெஸ்லிங் போட்டிகளில், "சாப்பிடு. தூங்கு. கைப்பற்று. திரும்ப செய்" (Eat, Sleep, Conquer. Repeat) என்று குறிப்பிடுவார்கள் . இந்த வாசகத்துக்கான காப்புரிமையை பெற்றுள்ளார்  பிராக் லெஸ்னர் மேலும் அவரது வக்கீல் பால் ஹேமன் வைத்துள்ளார். 

பால் ஹேமன் பேட்டி

பால் ஹேமன் தான் ரெஸ்லிங் போட்டிகளில் இதை கூறி பிரபலப்படுத்தினார் என்பதை கூறினார் . வழக்கு தங்கள் பிராக் லெஸ்னர்  காப்புரிமையை மீறி ரன்வீர் சிங் அந்த வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார் என்று முதலில் அவரது பதிவிற்கு பதிலடி கொடுத்தார் பால் ஹேமன். தற்கு பிறகு தான் நோட்டீஸ் அனுப்பப்பட்டது என தெரிவித்தார்.
 

English Summary

shocking incident during pakistan match. case against Indian team player


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal