இந்து கிரிக்கெட் வீரரை எங்கள் அணி கொடுமைபடுத்தியது, உண்மையை போட்டுடைத்த ஷோயப் அக்தர்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் அணியின்  சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா கடந்த 2000 ஆண்டு முதல் 2010 வரை அந்த அணியின் முக்கிய வீரராக திகழ்ந்தார். கடந்த 2012ஆம் ஆண்டு ஸ்பாட் பிக்சிங் என அவர் மீது புகார் எழுந்தது. இதனால் சர்ச்சையில் சிக்கிய அவரை  பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவரை சஸ்பெண்ட் செய்தது. அதன்பின் பலமுறை வீரர்களிடமும், வாரியத்திடமும் கனேரியா முயன்றும் அவருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவே இல்லை.

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் பேட்டி ஒன்றில்,  கனேரியா இந்து என்பதால் அவரை அனைவரும் ஒதுக்குகிறார்கள் என்று தெரிவித்திருந்தார். “கனேரியா அணியில் இடம் பெறுவதைப் பாகிஸ்தான் அணியில் உள்ள பல வீரர்கள் விரும்பவில்லை. ஏனென்றால் கனேரியா இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரை யாருக்கும் பிடிக்கவில்லை, மேலும் அவரின் பல்வேறு சாதனைகளுக்கும் இது வரை அங்கீகாரம் கிடைத்தது இல்லை. பல சமயத்தில் பாகிஸ்தான் அணியில் உள்ள  சக வீரர்கள் கனேரியாவின் திறமையை கிண்டல் செய்துள்ளனர். 

பல நேரங்களில் கனேரியா அளித்த உணவைக்கூட அவருடன் அணியில் விளையாடிய சக வீரர்கள் சாப்பிட மறுத்திருக்கிறார்கள். கனேரியா உணவு கொண்டுவந்தால்கூட அவர் எப்படி உணவு கொண்டுவரலாம் என அணியில் மற்ற வீரர்கள் சண்டையிட்டு கேட்பார்கள். இதே கனேரியா தான் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி அந்த போட்டியை வென்று கொடுத்தவர்தானே. கனேரியா பாகிஸ்தான் அணியில் விளையாடி ஏராளமான விக்கெட்டுகளையும், வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார். கனேரியா முயற்சி பாகிஸ்தான் நாங்கள் வென்றிருக்க முடியாது. ஆனால் அணியில் உள்ள பலரும் அவருக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்கவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் கனேரியா இந்து வீரர் என்பதால் பாகுபாட்டுடன்தான் நடத்தப்பட்டார்" எனத் ஷோயப் அக்தர் தெரிவித்தார்

இதையடுத்து, ஷோயப் அக்தர் பேசியதற்கு நன்றி தெரிவித்து டேனிஷ் கனேரியா இது குறித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், “நான் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் பாக்கிஸ்தான் அணியில் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டேன் என்று ஷோயப் அக்தர் சொன்னது அனைத்தும் உண்மைதான்.

என்னுடைய தற்போதைய வாழ்க்கை இப்போது நல்லவிதமாக இல்லை என்றும் என் வாழ்வில் ஏற்பட்ட குழப்பங்களைக் களையப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலையிட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன். நான் பாக்கிஸ்தான் அணியில் உள்ள பல வீரர்களை, பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகிகளைச் சந்தித்து எனது பிரச்சினைகளைக் தீர்க்க உதவி கேட்டேன் ஆனால் யாரிடம் இருந்தும் எனக்கு உதவி கிடைக்கவில்லை. இன்றும் பாகிஸ்தான் வீரராக  நான் பெருமை கொள்கிறேன். ஆனால் இந்த நேரத்தில் எனக்குப் பாகிஸ்தான் மக்கள் உதவ வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். 

ஷோயப் அக்தரின் நேர்காணலைப் முழுவதும் பார்த்தேன். எனக்கு நடந்த கொடுமைகள் குறித்து பல உண்மைகளைப் அவர் பேசியத்திற்க்காக நான் நன்றி தெரிவிக்கிறேன் எனறு குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shoaib akhtar says about danish kaneria


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->