வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில், இந்திய அணியில் இடம்பிடித்த வீரர் மருத்துவமனையில் அனுமதி!  - Seithipunal
Seithipunal


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் இடம் பெற்றுள்ளார். 

உலக கோப்பை போட்டியின்போது காயம் காரணமாக வெளியேறிய அவர், அதற்கு பிறகு பார்ம் இன்றி தவித்து வந்ததால் அவர் அணியில் இடம்பெற மாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அணியில் இடம்பிடித்துள்ளார். 

இந்த நிலையில் எதிர்பாராத விதமாக இன்று காலை அவர்  சையது முஷ்டாக் அலி தொடர், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடிய அவர், காலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கால் முட்டியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 

அவர் இது குறித்து தன்னுடைய டுவிட்டரில் படங்களுடன் பதிவு செய்துள்ளார். நான்கைந்து நாட்களில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவேன் என அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதனால் டிசம்பர் ஆறாம் தேதி தொடங்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் சரியாகி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shikhar dhawan injured


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->