புகழ்பெற்ற வீரர்... கப்பர் என அழைக்கப்படுபவர்... யார் இவர்? இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர்.! - Seithipunal
Seithipunal


இடதுகை மட்டை பந்தாளர்...

ரசிகர்கள் மற்றும் சக வீரர்களால் செல்லமாக கப்பர் என அழைக்கப்படுபவர்....

பிரபலமான ஹேண்டில் பார் மீசையை உடையவர்....

களத்தில் ஒரு துடிப்புடன் விளையாடும் வீரர்....

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களில் மிகவும் புகழ்பெற்ற வீரர்களில் ஒருவர்...

யார் இவர்?

நீங்கள் யோசித்ததும்... சரி தான்... 

ஷிகர் தவான்:

பிறப்பு : 

ஷிகர் தவான் டிசம்பர் 5ஆம் தேதி 1985ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார். வீட்டில் இவரது புனைப்பெயர் பாபு ஆகும். டெல்லியில் உள்ள செயிண்ட் மார்க்ஸ் சீனியர் பள்ளியில் படித்த தவான் தனது 12வது வயதில் கிரிக்கெட் விளையாட துவங்கினார். அதன்பின்னர் 17 வயது மற்றும் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி புகழ்பெற்றார் தவான்.

பல ஒருநாள் ஆட்டங்களை தன்னுடைய பிரத்யேக ஷாட்களின் மூலம் மெருகேற்றிக் கொண்டிருந்த தவானுக்கு இந்திய அணிக்குள் செல்ல 2010ஆம் ஆண்டு வாய்ப்பு கிடைத்தது.

கிரிக்கெட் வீரரான தவான் ஒருநாள், 20 ஓவர் மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுவார்.

குடும்பம் : 

இவரின் தந்தை மகேந்திர பால் தவான், தாய் சுனைனா ஆவார். தவானுக்கு ஸ்ரேஷ்டா எனும் இளைய சகோதரி உள்ளார்.ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியில் தொடர்ச்சியாக 2 தங்க மட்டைகளைப் பெற்ற முதல் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான். 

தன்னுடைய முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களம் இறங்கி டக் அவுட் ஆகி வெளியேறினார் தவான். தொடக்கமே சரிக்கியது. ஆனால் துவண்டுவிடவில்லை அவர், 136 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5,688 ரன்களை எடுத்து இந்திய அணியின் முக்கிய வீரராக அறியப்பட்டார்.

தவான், இந்திய அணிக்காக 34 டெஸ்ட் போட்டிகள், 133 ஒருநாள், 58 டி-20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

22 ஒருநாள் போட்டியில் 3 சதம், 6 அரை சதம் உட்பட மொத்தம் 960 ரன்களை குவித்தார்.

இந்திய அணிக்காக மொத்தமாக இதுவரை 9,337 ரன்களை அடித்துள்ள தவான், கடந்த 2013இல் மினி உலகக்கோப்பையாக கருதப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்களை சேர்த்து இந்திய அணி கோப்பை வெல்ல காரணமாக இருந்தார்.

விருது : 

2004 - 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் போட்டியின் வீரர் விருது.

2013 - ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியில் தொடர் நாயகன் விருது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shikar dhavan history 


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->