ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி..! சாம்பியன் பட்டத்தை தட்டி சென்ற சானியா மிர்சா.!! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்று வரும் சர்வதேச ஹோபர்ட் பெண்கள் போட்டியில் உலக நாடுகளை சார்ந்த பல வீராங்கனைகள் கலந்து கொண்ட நிலையில், இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக சானியா மிர்ஸா பங்கேற்றார். 

இந்த போட்டியில் விளையாடி வந்த சானியா மிர்ஸா, பெண்கள் இரட்டையர் டென்னிஸ் அரையிறுதி சுற்றில் வெற்றியடைந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இதனைப்போன்று உக்ரைன் நாட்டினை சார்ந்த வீராங்கனை கிச்செனோ நாடியா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். 

இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து இன்று சீன நாட்டினை சார்ந்த சாங் சுவாய் - பெங்க் சுவாயை ஜோடியுடன் போட்டியிட்ட நிலையில், ஆட்டத்தின் இறுதியில் 6-4 என்ற கணக்கில் சானியா மிர்ஸா - கிச்செனோ நாடியா ஜோடி பட்டத்தை தட்டி சென்றது. 

மேலும், கடந்த 2017 ஆம் வருடத்தில் காயம் மற்றும் குழந்தை பிறந்தது போன்ற காரணத்தால் சீன ஓபன் டென்னிஸ் போட்டியோடு பிற போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தால் நிலையில், தற்போது இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றியடைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sania mirza won doubles pair tennis match


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->