சாம் கரணுக்கு பதிலாக முக்கிய வீரரை தட்டி தூக்கிய சென்னை அணி.. உற்சாகத்தில் பிராவோ.!! - Seithipunal
Seithipunal


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டது. தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் சாம் கரன் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சாம் கரணுக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு ஸ்கேன் செய்ததில் காயம் பெரிய அளவில் இருப்பதால், ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், டி20 உலகக்கோப்பை தொடரியில் இருந்தும் விலகியுள்ளார்.  ஓரிரு நாட்களில் துபாயிலிருந்து நாடு திரும்புவார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், சாம் கரண் விலகியதால் அவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் டோமினிக் ட்ரேக்ஸை ஒப்பந்தம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ். பிராவோ தலைமையில் சிபிஎல் தொடரை வென்ற St Kitts & Nevis Patriots அணியின் முக்கிய வீரராக இடம்பெற்றவர் டோமினிக், இவரை சென்னை அணி ஒப்பந்தம் செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sam curran replacement Dominic drakes in csk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->