டோனியிடம் இதை எதிர்பார்க்காதீர்கள்., இந்தியாவின் தோல்வி குறித்து சச்சின் பரபரப்பு தகவல்!! - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையே நடந்த போட்டியில் 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை  இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ரோஹித், ராகுல், கோலி தொடக்க வீரர்கள் மூவரும் 1 ரன்களில் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

ஜடேஜாவும் , தோனி இறுதிகட்டத்தில் போராடியும் 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி இந்திய அணியை விழித்தி அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்றது. தோனி ரன் அவுட் ஆனது விமர்சிக்கப்பட்டாலும், தொடக்க வீரர்கள் ரோஹித், ராகுல், கோலி மூவரும் சொதப்பியதே நேற்றைய ஆட்டத்தில் மிகப்பெரிய தவறாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்திய அணியின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், ”எனக்கு பெரிய அதிருப்தியாக இருப்பது, 240 என்பது சேஸ் செய்யக்கூடிய இலக்குதான். இது மிகப்பெரிய ரன் எண்ணிக்கையெல்லாம் இல்லை. இந்தியாவின் தொடக்க வீரர்களானரோஹித், ராகுல், கோலி உள்ளிட்ட வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்து நியூசிலாந்து பவுலர்கள் இந்தியாவின் உலகக்கோப்பை கனவை கலைத்துவிட்டனர்.

ஆனால், நடந்த உலகோப்பை போட்டியில் எப்போதும் நல்ல தொடக்கத்தை கொடுத்து வைத்த  ரோஹித் சர்மா அரையிறுதியில் சொதப்பி விட்டார். அல்லது கேப்டன் விராட் கோலி ஒரு உறுதியான அடித்தளம் அமைப்பார் என எப்போதும் எண்ணிக்கொண்டு இருக்க முடியாது. அவர்களைச் சுற்றியிருக்கும் வீரர்களும் அதிக பொறுப்புகளை இது போன்ற நேரத்தில் ஏற்க வேண்டியது இருக்கும்” என கூறியுள்ளார்.

தோனியின் ரன் அவுட் குறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், “தோனி வந்து தான் ஆட்டத்தை பினிஷ் செய்வார் என எப்போதும் நாம் எதிபார்ப்பது சரியாக இருக்காது. அவர் அதை மீண்டும் மீண்டும் செய்திருந்தார் என்றாலும் கூட, நாம் எப்போதும் அதையே எதிர்பார்க்கக் கூடாது. நீங்கள் நியூசிலாந்தின் பந்து வீச்சை பார்த்து இருப்பீர்கள், சரியான பகுதியில் பந்து வீசினார்கள். வில்லியம்சனின் கேப்டன்ஷிப் அருமையாக இருந்தது" என சச்சின் தெரிவித்தார். 

English Summary

sachin tweet about dhoni and kholi


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal