இந்திய அணியின் தோல்வி குறித்தும், தோனி குறித்தும் உண்மையை போட்டு உடைந்த சச்சின் டெண்டுல்கர்.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டி இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை வென்று முதல் முறையாக உலக கோப்பையை பெற்றுள்ளது. 

முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 241 ரன்கள் எடுத்தது 242 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, வெற்றி பெற கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இத்னால் போட்டி சமனில் முடிந்தது. 

இதையடுத்து சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 15 ரன்கள் எடுத்தது. 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 15 ரன்கள் மட்டும் எடுத்தது. 

இதிலும் சமநிலையில் முடிந்தது.இதையடுத்து அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி உலக கோப்பையை வென்றது.

இந்நிலையில் பவுண்டரி முறையில் உலக கோப்பை வென்றது குறித்து கேள்வி சச்சின் டெண்டுல்கர் எழுப்பப்பட்டது, அதற்கு பதிலளித்த சச்சின் டெண்டுல்கர், இப்படி ஒரு சூழ்நிலையில் பவுண்ட் முறையை வைத்து யார் வெற்றி பெற்றது என்பதை தீர்மானத்திற்கு பதிலாக இன்னொரு சூப்பர் ஓவர் கொடுத்திருக்க வேண்டும். 

இது உலக கோப்பைக்கு மட்டுமல்ல அனைத்து போட்டிகளுக்கும் பொருந்தும். மேலும் தோனி குறித்து கூறினார். தோனியை ஐந்தாவதாக களம் இறக்கியிருக்க வேண்டும். இந்திய அணி எப்படி ஒரு நிலையில் இருக்கும்போது தோனியின் ஆட்டம் மிக முக்கியமானது. தோனியை தொடர்ந்து ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக்கை இறக்கியிருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sachin Tendulkar speech in India vs newzealand match


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->