உலகக்கோப்பை: சச்சினின் சாதனையை தகர்த்த இளம் வீரர்.! வியப்பில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


உலகக்கோப்பை  தனது கடைசி கட்டத்தை அடைந்துள்ளது. லீக் போட்டிகள் முடியும்  நிலையில் உள்ளது. நேற்றைய போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் ஆப்கானிஸ்தான் அணி விளையாடியது. இதில் வெஸ்ட் இண்டிஸ் அணி வெற்றி பெற்றது. 

ஆப்கானிஸ்தான் அணியில் இக்ராம் அலி கில் சிறப்பாக விளையாடி  அதிக பட்சமாக 86 ரன்கள் குவித்தார். இதனால் உலகக்கோப்பை போட்டியில் இளம் வயதில் 80க்கு மேல் ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை எட்டியுள்ளார் இக்ராம். இந்த சாதனை இதுவரை  சச்சின் வசம் இருந்தது. 1992 உலகக்கோப்பையில் 18 வயது 318 நாட்கள் இருந்த போது சச்சின், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 81 ரன்கள் அடித்தது தான் சாதனையாக இருந்தது. இதில் நேற்றைய ஆட்டத்தில்  86 ரன்கள் அடித்த போது இக்ராம்க்கு 18 வயது 278 நாட்கள் ஆகியுள்ளது.

இவர் ஆப்கானிஸ்தான் அணியில் விக்கெட்கீப்பர் மற்றும்  பேட்ஸ்மேனாக  இக்ராம், உள்ளார். மேலும் இவர்  குமார் சங்கக்காராவை பின்பற்றுபவர். நான் பேட்டிங் செய்யும் போது எப்போதும்  சங்கக்காரா என் நினைவில் இருப்பார் என இக்ராம் தெரிவித்தார்.

மேலும் கிரிக்கெட்டின் ஜாம்பவான்  சச்சினின் சாதனையை முறியடித்து குறித்து இக்ராம் கூறுகையில்: சச்சினின் சாதனையை முறியடித்ததில் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது' என்று கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sachin record break afg player ikram


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->