டோனி நீங்க இதை பண்ணுங்க அது தான் இந்திய அணிக்கு சிறந்தது., சச்சின் வெளியிட்ட பரபரப்பு தகவல்!! - Seithipunal
Seithipunal


உலகக்கோப்பை விளையாடும் முன்னாள் கேப்டன் டோனி சில சமயம் ரசிகர்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மந்தமாக ஆடியதாக டோனியை கிரிக்கெட் சகாப்தமான தெண்டுல்கர் விமர்சனம் செய்து இருந்தார். அவர் இன்னும் வேகமாக ஆடி இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்திலும் டோனி கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடாமல் மிதமான ஆட்டம் ஆடினார். இதனால் இந்திய அணி போராடாமல் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது இதனால் டோனி மீது விமர்சனம் எழுந்தது. அதே போல கடைசியாக நடைபெற்ற வங்காள தேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் டோனியால் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆட முடியாமல் போனது. ஆனாலும் அவர் களத்தில் இருந்தால் விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தும் திறமை வாய்ந்தவர் என்ற கருத்தும் இருக்கிறது.

இந்த நிலையில் டோனியை விமர்சித்த சச்சின் தற்போது டோனிக்கு திடீரென ஆதரவு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

டோனி களத்தில் நின்று விளையாடுவது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது அணிக்கு என்ன தேவை என்பதை அவர் சரியாக அறிந்து வைத்திருந்தார். 50 ஓவர் வரை அவர் களத்தில் நீடித்து ஆட வேண்டும். இது மற்ற வீரர்களுக்கு உதவியாக இருக்கும். அணையின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு அவர் பூர்த்தி செய்யக்கூடியவர் என சச்சின் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sachin advise to dhoni


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->