இந்திய அணிக்கு புதிய கேப்டன்.? நெருக்கடியில் விராட் கோலி.! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் வெற்றி 59 சதவீதம், ஒருநாள் போட்டிகளில் 70 சதவீதம் மற்றும் டி20 போட்டிகளில் 65 சதவீதம் வைத்திருக்கிறார். மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் மிகச் சிறந்த கேப்டன் என்று விராட் கோலியை பெயர் பெற்றுள்ளார். இருப்பினும் இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை அவர் கைப்பற்றவில்லை. 

எனவே, விராட் கோலிக்கு உலக கோப்பை டி20 தொடர் முக்கியமான தொடராக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், இந்த உலகக் கோப்பை டி20 தொடரை விராட் கோலியின் கேப்டன்சியை முடிவு செய்யும் என கூறப்படுவது. இந்நிலையில், இது குறித்து முன்னாள் இந்திய சபா கரிம் கூறியதாவது, மூன்று முறை ஐசிசி சர்வதேச தொடரை கைப்பற்ற தவறிய விராட் கோலி, இந்த முறை அதைக் கைப்பற்றி விட்டால் எந்த பிரச்சினையும் இல்லை. 

ஒருவேளை இந்த முறை அவர் ஐசிசி உலக கோப்பை டி20 தொடரை கைப்பற்ற தவறிவிட்டால் மிகப் பெரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும். ஒருவேளை அவரால் இந்த முறை ஐசிசி சர்வதேச தொடரை கைப்பற்ற முடியவில்லை என்றால், பிசிசிஐ உடனடியாக விரைந்து ஒவ்வொரு பார்மெட்டுக்கும் தனித்தனி கேப்டன்களை நியமிக்கவேண்டும்.  3 பார்மெட்டுக்கும் தற்போதைய தலைமை தாங்கி வரும் விராட் கோலியின் வேலை சுமையை குறைக்கும் விதமாக, ஒவ்வொரு பார்மெட்டுக்கும் தனித்தனி கேப்டன்களை நியமிப்பதே சரியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

saba karim says about virat kohli captaincy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->