டி20 உலக கோப்பை.. இந்திய அணியில் 2 தமிழக வீரர்கள்.? - Seithipunal
Seithipunal


கடந்த 20027ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டி.20 போட்டிகளுக்கான உலகக் கோப்பை  தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 6-டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று உள்ளது. அதில் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தொடரில் இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது. 

இதனிடையே கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரான கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர்-நவம்பர் மாதத்தில் துபாய் மற்றும் ஓமனில் நடைபெற முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் சபா கரீம் எதிர்வரும் டி20 உலகக் கோப்பைக்கான தனது இந்திய அணியை தேர்வு செய்துள்ளார். சபா கரீம் தேர்வு செய்துள்ள இந்திய அணியில், ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், நடராஜன், பும்ராஹ், ஜடேஜா, ராகுல் சாஹர், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Saba karim choice the t20 world cup Indian team


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->