கடைசி பந்தில் சிக்ஸர்.! ஒரே ஒரு ரன்னில் வெற்றியை பறிகொடுத்த மேற்குகிந்திய தீவுகள் அணி.! - Seithipunal
Seithipunal


மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி 2 டெஸ்டுகள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது.

இதில், தென் ஆப்பிரிக்க அணி. டெஸ்ட் தொடரை 2-0 என்று வென்றது. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

நடந்து முடிந்துள்ள முதல் இரண்டு டி20 ஆட்டத்தில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், செயின்ட் ஜார்ஜில் நடைபெற்ற மூன்றாவது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்குகிந்திய தீவுகள் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, நிர்ணயிக்காட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குயின்டன் டி காக் அதிரடியாக ஆடி 72 ரன்கள் எடுத்தார். 

இதனையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இதன்பிறகு மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது. 

ஆட்டத்தின் கடைசி ஓவரில் மே.இ. தீவுகள் அணி வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்டது. கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்தும் மே.இ. தீவுகள் அணியால் வெற்றிபெற முடியவில்லை. 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்த ஷம்சி ஆட்டத்தின் நாயகனாகத் தேர்வானார். இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 2-1 என கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sa vs wi 3rd t20


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->