இந்திய அணியில் களமிறங்கும் சிஎஸ்கே-வின் அதிரடி மன்னன், இளம் சிங்கக்குட்டி.! உச்சகட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி கொண்டு இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடர் முடிந்ததும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய - தென் ஆப்பிரிக்கா அணிகள் மொத உள்ளன. 

இதில், இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டிருந்த நிலையில், ரோகித் சர்மாவுக்கு தொடையில் காயம் ஏற்பட்டதால் போட்டியில் பங்கேற்க முடியவில்லை.

இந்த நிலையில் பிசிசிஐ ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது. அதன்படி, கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக பும்ராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், குறிப்பிடும்படியாக இந்திய ஒரு நாள் அணியில் சிஎஸ்கே அதிரடி மன்னன், இளம் சிங்கக்குட்டி ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெற்றுள்ளார். வெங்கடேஷ் அய்யரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஐபிஎல்2021 சீசனில் 635 ரன்கள் குவித்ததற்காக ஆரஞ்சு தொப்பியை ருதுராஜ் வென்றார் என்பதும், விஜய் ஹசாரே டிராபி தொடரின் 5 ஆட்டங்களில் 4 சதம் உள்பட 603 ரன்கள் குவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக கூட அவர் இறங்க வாய்ப்புள்ளது. 

ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி விவரம்: 

கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், 
ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், 
ஷ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், 
ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), 
சாஹல், அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், 
ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), புவனேஷ்வர் குமார், 
தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ruthuraj in team india


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->