ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மா.! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, இந்திய அணிக்கு எதிராக மூன்று ஒருநாள், மூன்று டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது.

இதில், ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடர கைப்பற்றிய நிலையில், நேற்று 3-வது ஒருநாள் ஆட்டம் இந்தூரில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்யவே, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 9 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் எடுத்தது‌.

அதனைத் தொடர்ந்து 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 295 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா 85 பந்துகளில் (9 பவுண்டரி & 6 சிக்ஸர்)101 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 30வது சதமடித்தார்.

இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசியவர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த ரிக்கி பாண்டிங்கின் 30 சதங்கள் சாதனையை முறியடித்துள்ளார் ரோஹித் சர்மா.

அதன்படி  241வது போட்டியில் 30 சதமடித்துள்ளார் ரோஹித் சர்மா. ரிக்கி பாண்டிங் 30 சதங்களை 375 போட்டிகளில் அடித்துள்ளார். 

ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (49 சதங்கள்), விராட் கோலி (46) ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rohit Sharma equalise most oneday international centuries


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->