22 ஆண்டுகால சாதனையை முடிவுக்கு கொண்டு வந்த ஹிட்மேன்! ரோஹித் ஷர்மா படைத்த புதிய வரலாறு!  - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் குவித்தது, 316 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 9 ரன்கள் எடுத்திருந்த போது, இலங்கை அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சனத் ஜெயசூர்யா கடந்த 1997-ம் ஆண்டில் தொடக்க ஆட்டக்காரராக 2 ஆயிரத்து 387 ரன்கள் சேர்த்திருந்த சாதனையை தகர்த்தார். 

இந்த போட்டிக்கு முன்பாக 2019ம் ஆண்டில் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் ரோஹித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக 2ஆயிரத்து 379 ரன்களுடன் இருந்தார் எனபது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த சாதனையை முறியடித்து புதிய வரலாற்றினை படைத்துள்ளார் ரோஹித். 

அரைசதம் அடித்த ரோஹித் ஷர்மா 63 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்திய அணி 22 ஆவது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்து 122 ரன்களுடன் ஆடி வருகிறது. ராகுல் 56 ரன்களுடன் களத்தில் உள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rohit sharma breaks sanath jayasriya 22 years record


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->