முக்கிய பதவிக்கு முதல் முறையாக நியமிக்கப்பட்ட ரோகித் சர்மா.! ரசிகர்கள் கொண்டாட்டம்.! - Seithipunal
Seithipunal


ஸ்பெயினின் லா லிகா கால்பந்தாட்ட தொடருக்கான இந்திய விளம்பர தூதராக, கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகளவில் அளவில் மிகவும் புகழ்பெற்ற கால்பந்தாட்ட தொடர்களில் ஒன்று லா லிகா, இந்தியாவில் கால்பந்தாட்டத்தை பிரபலபடுத்தும் நோக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோகித் சர்மாவை இந்தியாவிற்கான விளம்பர தூதராக நியமித்துள்ளது.

கால்பந்தாட்ட வீரர் அல்லாத ஒருவர் லா லிகா தொடரின் விளம்பர தூதராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இந்தியாவில் கால்பந்தாட்டத்தை பிரபலபடுத்த அந்த அமைப்பு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பல கால்பந்தாட்ட பள்ளிகளை துவக்கியுள்ளதோடு, நடப்பாண்டில் நடக்கவுள்ள லா லிகா தொடரின் போட்டிகளை இந்திய ரசிகர்களுக்கு பேஸ்புக்கில் இலவசமாக ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது.

லா லிகா தொடரின் விளம்பர தூதராக ரோகித் சர்மாவை நியமிக்கப்பட்டத்தற்கு சமூகவலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rohit sharma appointed has laliga brand ambassador


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->