வீடியோ : 7 வருடங்களுக்கு பிறகு அடிக்கப்பட்ட ஷாட்! ரிஷப் பண்ட்டை பார்த்து அதிசயிக்கும் கிரிக்கெட் உலகம்!  - Seithipunal
Seithipunal


இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஆனது அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை ஆடி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்க்ஸை ஆடி வரும் இந்திய அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்களை எடுத்து 89 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

கடந்த சில போட்டிகளில் அவர் 90 ரன்களை எட்டியதும் ஆட்டமிழந்த நிலையில், இந்த போட்டியில் அவ்வாறு நடந்திடுமோ என்ற அச்சம் கொண்டிருந்த வேளையில், 94 ரன்களில் இருந்தபோது சூப்பரான ஒரு சிக்ஸரை தூக்கியடித்து சதத்தை நிறைவு செய்தார். இந்திய மண்ணில் இது அவருக்கு முதல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக அவருடைய மூன்றாவது டெஸ்ட் சதம். அதேசமயம் இங்கிலாந்துக்கு எதிராக இரண்டாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. சதமடித்த ரிஷப் பண்ட் ஆண்டர்சன் பந்துவீச்சில், அதிரடி ஷாட் ஆட முயற்சித்து கேட்ச் ஆகி வெளியேறினார். அவர் 101 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இந்த ஆட்டத்தில் ரிஷப் பண்ட் வானவேடிக்கை காட்டினார். குறிப்பாக அந்த அணியின் உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் ரிவர் ஸ்விப்பில் ஒரு பவுண்டரி அடித்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இந்த ஒரே ஷாட் அதிகளவில் வைரலாகி வருகிறது. உலகின் அபாயகரமான பவுலராக அறியப்படும் பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட தனி துணிச்சல் வேணும் என அனைவரும் பாராட்டி தள்ளுகின்றனர். கடந்த 2014 ஆம் ஆண்டு ஆண்டர்சன் பந்துவீச்சில் இவ்வாறு ஷாட் அடித்ததாக பிரபல கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rishabh pant reverse sweep against Anderson


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->