முதல் போட்டி ரத்து ஆன நிலையில் அடுத்த இரண்டு போட்டிகளும்..... ! கிரிக்கெட் வாரியம் அதிரடி உத்தரவு!  - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இன்று தர்மசாலாவில் நடைபெறவிருந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. 

மார்ச் 15 மார்ச் 18 ஆகிய இரண்டு நாட்களில் அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இதனிடையே உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்குமாறு மத்திய குடும்பம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது.

இதனையடுத்து அடுத்து நடைபெறவுள்ள இரண்டு விளையாட்டுப் போட்டிகளையும் ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த போட்டியில் போட்டியினை நேரடி ஒளிபரப்பு செய்யும் கேமராமேன்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்கள் அணி வீரர்கள் நிர்வாகிகள் ஆகியோர் மட்டுமே மைதானத்தில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் நாளை நடைபெற இருக்கும் இரஞ்சி டிராபி இறுதிப் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல சாலை போக்குவரத்து விழிப்புணர்வை முன்னிறுத்தி நடைபெற்றுவரும் ரோட் சேஃப்டி வேர்ல்டு சீறியஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல கால்பந்து போட்டியில் இந்தியன் சூப்பர் லீக் இறுதி ஆட்டமும் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

remaining two ODIs of the ongoing series to be played behind closed doors


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->