இவர்களுக்காக தான் அடிக்கடி பேட்டினை மாற்றி விளையாடுகிறேன்., என காரணத்தை வெளியிட்ட 'தல டோனி'!! - Seithipunal
Seithipunal


உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இந்தியா, ஆஸ்திரேலியா  உள்பட பத்து நாடுகள் பங்கேற்று விளையாடி வரும் நிலையில். குறிப்பாக இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரரும் டோனி தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியின் நடுவிலும் தனது பேட்டினை அடிக்கடி மாற்றம் செய்து விளையாடி வருகிறார்.

ஒவ்வொரு முறையும் அவர் மாற்றும் பேட்டில் வெவ்வேறு நிறுவனத்தின் முத்திரைகள் பதிக்கப்பட்டதாக உள்ளது. இதற்கான காரணம் குறித்து ரசிகர்களிடையே பல்வேறு கருத்துகள் நிலவி வந்தது. இந்நிலையில் இது குறித்து டோனியின் மேலாளர் அருன் பாண்டே சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். 

டோனியின் மேலாளர் கூறியதாவது, முன்னாள் கேப்டன் தோனி தான் விளையாடும் போட்டிகளின் போது வெவ்வேறு நிறுவனங்களின் 'லோகோ’ பதித்த பேட்டுகளை கொண்டு விளையாடுவதன் மூலம் தனது கிரிக்கெட் வாழ்வில் பல்வேறு நிலைகளை கடந்து வந்தபோது தனக்கு மிகவும் உறுதுணையாக இருந்த பேட் நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர் அடிக்கடி பேட்டினை மாற்றி விளையாடி வருவதாகவும் பேட் பயன்படுத்தும் விளம்பரத்திற்காக டோனி எந்தவிதமான ஊதியத்தையும் இதுவரை வாங்கவில்லை என டோனியின் மேலாளர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

reason for dhoni bad changing


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->