முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலைக்கான காரணம் வெளியானது!! - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர்(வயது 57) தமிழகத்தை சேர்ந்த இவர் இந்திய அணிக்காக 7 போட்டிகளில் விளையாடியுள்ள சந்திரசேகர் தமிழ்நாடு அணி கேப்டனாக இருந்துள்ளார்.

இந்திய அணியின் தேர்வு குழு தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ள இவர், கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பணியாற்றியுள்ளார், 1988 முதல் 1990 வரை இந்திய அணிக்காக 7 சர்வதேச போட்டிகளில் வி.பி. சந்திரசேகர் விளையாடியுள்ளார். தமிழக ரஞ்சி அணியின் பயிற்சியாளராக வி.பி. சந்திரசேகர் பதவி வகித்துள்ளார். 

இந்தநிலையில், வி.பி.சந்திரசேகர்க்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது, இதையடுத்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு அவர் சிகிச்சை பலனின்றி உயிரழிந்தார் என காலையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதையடுத்து போலீஸ் நடத்திய விசாரணையில் வி.பி.சந்திரசேகர் தனது வீட்டின் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை  செய்து கொண்டதாக தற்போது தெரிவந்துள்ளது. தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. சந்திரசேகரின் உடலை மீட்ட மயிலாப்பூர் போலீசார், பின்னர் பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் வழக்கு பதிவு செய்தி விசாரித்து வந்தனர். தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்காத நிலையில்,  கிரிக்கெட் தொழிலில் ஏற்பட்ட இழப்பு காரணமாக, வி.பி.சந்திரசேகர் கடும் மனஉளைச்சலில் இருந்ததாக, அவரது மனைவி சௌம்யா கூறியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடங்கப்பட்டபோது, திருவள்ளூர் அணியை நடத்தி வந்த சந்திரசேகர், 2 ஆண்டுகளுக்கு முன் காஞ்சி வீரன்ஸ் அணியை 4 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளார். டிஎன்பிஎல்லில் உள்ள மற்ற அணிகளின் உரிமையாளர்கள் எல்லாம் பெரிய தொழிலதிபர்களாகவும், ஸ்பான்சர்களுக்கு பஞ்சமில்லாதவர்களாகவும் இருந்து வருகின்றனர். 

ஆனால், வி.பி.சந்திரசேகரைப் பொறுத்தவரை அவருக்கு நிறுவனப் பின்னணி ஏதும் இல்லை.தனி ஒரு மனிதராக தனது சேமிப்புகளையும், புரட்டிய பணத்தையும், வங்கிகளில் கடன் பெற்று தான் காஞ்சி வீரன்ஸ் அணியை நடத்தி வந்ததாக சொல்கிறார்கள். அணிக்காக வீரர்களை ஏலம் எடுப்பதற்கு செலவிடப்படும் தொகை, போட்டிகள் நடைபெறும்போது ஒரு வீரருக்கு நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் படி, வீரர்கள் தங்குவதற்கான வசதி, போக்குவரத்திற்காக வால்வோ பஸ், வெளியூர்களுக்கு சென்றால் தங்குவது மற்றும் உணவுக்கான ஹோட்டல் பில் என செலவுகள் கையைமீறிச் சென்றதால், வி.பி.சந்திரசேகர் கடன் பிரச்சனையில் சிக்கியதாக சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

reason for chandra seakar death


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->