இன்றாவது வெற்றி பெறுமா பெங்களூர்! பரிதாபமான விராட் கோலி அணி அசத்தலான தொடக்கம்!  - Seithipunal
Seithipunal


12 ஆவது ஐபிஎல் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஒருபுறம் தேர்தல் ஜுரம் என்றால் மறுபுறம் கிரிக்கெட் ஜுரம் என மக்கள் எந்நேரமும் பிசியாக இருக்கும் நிலையிலே இருக்கிறார்கள். இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் பரிதாபமாக இருக்கின்றது விராட் கோலியை  கேப்டனாக கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. 

கோலி, டிவில்லியர்ஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்களை அவர்களின்  அணி கொண்டிருந்தாலும் இதுவரை அந்த அணியின் வீரர்கள் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தாததினால் அந்த அணியானது தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் இன்று தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை கேப்டனாக கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன்  பெங்களூர் அணி மோதுகிறது. பெங்களூர் அணி  சொந்த மைதானமான பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் கார்த்திக் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

கொல்கத்தா அணியை பொறுத்தவரை கடந்த போட்டியில் ஆடிய நாய்க் நீக்கப்பட்டு சுனில் நரைன் உள்ளே கொண்டுவரபட்டுள்ளார்.  பெங்களூர் அணியை பொறுத்தவரை இதுவரை அதிகமாக நம்பிய அதிரடி ஆட்டக்காரர் சிம்ரோன் ஹெட்மேயர்  நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டிம் சவுத்தியும்,  உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் பவன்  நேகியும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக தொடக்க ஆட்டக்காரர்களை மாற்றி விளையாடி வரும் பெங்களூர் அணியில் இன்றைய தொடக்க ஆட்டக்காரர்களாக அணியின் கேப்டன் விராட் கோலியும் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேலும் களம் இறங்கியுள்ளார்கள். முதன்முறையாக பெங்களூர் அணிக்கு அசத்தலான தொடக்கம் கிடைத்துள்ளது. 5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்களை பெங்களூர் அணி எடுத்த்துள்ளது.  



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rcb got good start against kkr


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->