ஒலிம்பிக் : இன்று தங்கம் வெல்ல வேண்டிய இந்திய வீரரை கடித்து வைத்த கொடூரன்.! என்ன ஆனது? மகிழ்ச்சியான செய்தி.! - Seithipunal
Seithipunal


ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியின் அரையிறுதி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் ரவிக்குமார் தாகியா, கஜகஸ்தான் வீரரை எதிர்த்து விளையாடினார். இந்த ஆட்டத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய கஜகஸ்தான் வீரர் அதிக புள்ளிகளை பெற்று முன்னிலை பெற்று வந்தார்.

ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் அதிரடி காட்டிய இந்திய வீரர் ரவிக்குமார் தாகிய, கஜகஸ்தான் வீரரை தரையில் சாய்த்து வெற்றியை கைப்பற்றினார். 

இந்திய வீரர் ரவிகுமார் தாகியவின் கிடுக்குப் பிடியில் இருந்து தப்ப முடியாத கஜகஸ்தான் வீரர், ரவிக்குமாரை கடுமையாக கண்டித்து வைத்துவிட்டார். கஜகஸ்தான் வீரர் கடித்த போதிலும், அந்த வலியை பொறுத்துக் கொண்டு, அவரை விட்டுவிடாமல் வெற்றியை வசப்படுத்தினார்.

அரையிறுதியில் இந்திய வீரர் ரவிக்குமார் வெற்றி பெற்றதன் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் இந்தியாவுக்கு வெள்ளி அல்லது தங்கப்பதக்கம் உறுதியாகியுள்ளது. இன்று மாலை நடைபெற உள்ள தங்கத்திற்கான போட்டியில் கஜகஸ்தான் வீரர் கடித்து வைத்த காரணத்தினால் அவர் உடல் தகுதி முழுமையாக பெற்று உள்ளாரா என்ற அச்சம் எழுந்து வந்தது.

இந்நிலையில், மருத்துவ அதிகாரிகள் குழுவினர் ரவிக்குமார்-க்கு உடல் பரிசோதனை செய்தனர். அதில் அவர் முழுமையான உடல் தகுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை நடைபெறும் 57 கிலோ மல்யுத்த இறுதிப் போட்டியில், உலக சாம்பியன் ஆன ரஷ்ய வீரருடன், இந்திய வீரர் ரவிகுமார் தாகியா மோதுகிறார். இந்த போட்டியில் ரவிக்குமார் தங்கம் வென்று நம் தேசத்திற்கு பெருமை சேர்ப்பார் என்று இந்திய மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RaviKumar Dahiya in final today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->