நாலாவது போட்டியிலும் தோல்வி! பரிதாபமான பெங்களூர் அணி!  - Seithipunal
Seithipunal


ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் இதுவரை இந்த தொடரில் வெற்றி பெறாத ராயல் சாலஞ்சர்ஸ்  பெங்களூர் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இவ்விரு அணிகளும் இதுவரை விளையாடிய  மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் அஜின்கியா ரகானே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி, பார்த்திவ் படேல் களமிறங்கினார். மிகவும் மந்தமாக விளையாடிய விராட் கோலி 25 பந்துகளில் 23 ரன்கள் மட்டுமே எடுத்து 3 பவுண்டரிகளுடன் ஸ்ரேயாஸ் கோபால் பந்துவீச்சில் போல்டு ஆகி வெளியேறினார்.  அடுத்ததாக களமிறங்கிய டிவில்லியர்ஸ்  2 பவுண்டரி அடித்த  திருப்தியுடன் 9 பந்துகளில் 13 ரன்கள் அடித்து அதே ஸ்ரேயாஸ் கோபாலிடம் கேட்ச்  கொடுத்து ஆட்டமிழந்தார். 

அதற்கு அடுத்ததாக வந்த வெஸ்ட்  இண்டீஸ்  இன் சிம்ரோன் ஹத்மேயர்  பெங்களூர் அணியில் இடம் பெற்றதில் இருந்து என்ன ஆனதோ, டெஸ்ட் போட்டிகளை கூட அவர் இப்படி ஆடியதில்லை அந்த அளவிற்கு மோசமாக ஆடி வருகிறார். 9 பந்துகளை சந்தித்த ஒரு ரன் மட்டுமே எடுத்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஒருபுறம் பார்த்திவ் படேல் நிற்க, மறுபுறம் வந்த  மார்கஸ் ஸ்டைநிஸ் தடுப்பாட்டத்தை ஆடினார். 

மறுபுறம் ஆடிக்கொண்டிருந்த பார்த்தீவ் பட்டேல் அரை சதத்தை அடித்தார். அவர் 41 பந்துகளில் 67 ரன்களை 9 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் எடுத்தார்.  இறுதியாக களமிறங்கிய மொய்ன் அலி சிறிது அதிரடி காட்ட நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் குவித்துள்ளது. ஸ்டைநிஸ் 28 பந்துகளில் 31 ரன்களை எடுக்க, மொய்ன் அலி 9 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 

மிகவும் கட்டுக்கோப்பாக பந்து வீசிய ஸ்ரேயாஸ் கோபால் 1 மெய்டன் ஒவருடன் 12 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ராஜஸ்தான் அணி 159 ரன்களை அடித்து இந்த தொடரின் முதல் வெற்றியை பெருமா? அல்லது 158 ரன்களுக்குள் மடக்கி பெங்களூர் அணி முதல் வெற்றியை பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

அடுத்து விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு ரஹானே பட்லர் அசத்தலான தொடக்கம் கொடுத்தனர். ராஹனே 22 , பட்லர் 59, ஸ்மித் 38, திரிபாதி 34, ஸ்டோக்ஸ் 1 ரன்கள் எடுக்க இறுதி ஓவரில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த தொடரில் இது தான் ராஜஸ்தான் அணிக்கு முதல் வெற்றியாகும். அதே நேரத்தில் கோலி தலைமையிலான பெங்களூர் அணிக்கு இது நான்காவது தோல்வியாகும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajasthan royals won 1st match of this series


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->