பஞ்சாபை பஞ்சராக்கிய ராஜஸ்தான்! சரவெடியாக வெடித்த ஸ்டோக்ஸ், சாம்சன்!  - Seithipunal
Seithipunal


2020 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான 50 வது லீக் போட்டியில் இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் மற்றும் மன்தீப் சிங் களமிறங்கினார்கள். முதல் ஓவரினை ஜோப்ரா ஆர்ச்சர் வீசினார். முதல் ஓவரையே அட்டகாசமாக விச, முதல்வரின் இறுதிப் பந்தில் பவுன்சர் பந்தை எதிர்கொள்ள முடியாமல் மந்தீப் சிங் ஸ்டோக்சிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார். 

அதற்கடுத்ததாக வந்த கிறிஸ் கெயில் ஆரம்பம் முதலே அடித்து ஆட ஆரம்பிக்க, கேஎல் ராகுல் அதற்கு ஒத்துழைப்பு அளித்து ஒன்று இரண்டு ரன்களாக அடித்துக் கொண்டிருந்தார். ரியான் பராக் மற்றும் ராகுல் திவேதியா இருவரும் கெயில் கேட்சுகளை விட்டுவிட அந்த வாய்ப்பினை பயன்படுத்தி அதிரடியாக விளையாடினார். 

மறுமுனையில் ஆடிக்கொண்டிருந்த லோகேஷ் ராகுல் அடித்து ஆட ஆரம்பிக்கையில் 41 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் 46 ரன்களை எடுத்திருந்தபோது ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் ராகுல் திவேதியாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது 15வது ஓவரில் பஞ்சாப் அணி 121 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பிறகு நிக்கலஸ் பூரன் களமிறங்க அவர் வந்த வேகத்தில் 3 சிக்சர்கள் விளாசி விட்டு 10 பந்துகளில் 22 ரன்களுடன் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் ராகுல் திவேத்தியவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து மேக்ஸ்வெல் களமிறங்க, கெயில் 63 பந்துகளில் 99 ரன்கள் குவித்துள்ளார். அவர் 6 பவுண்டரிகளையும் 8 சிக்ஸர்களையும் விளாசினார். மேக்ஸ்வெல் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.  20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை எடுத்துள்ளது. 

ராஜஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஆர்ச்சர், ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினார்கள். வருண் ஆரோன் மற்றும் கார்த்திக் தியாகி பந்துவீச்சில் பஞ்சாப் வீரர்கள் சிக்ஸர்களை பறக்கவிட்டனர். 

ராஜஸ்தான் அணிக்கு பென் ஸ்டோக்ஸ் அபாரமாக விளையாடி அற்புதமான தொடக்கத்தினை கொடுத்தார். அணி 60 ரன்களை எட்டுவதற்குள் 50 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார் ஸ்டோக்ஸ். அடுத்து வந்த சாம்சனும் அதிரடியாக விளையாட, அதற்குள் உத்தப்பா 30 ரன்களில் ஆட்டமிழந்தார். நன்றாக ஆடிய சாம்சன் 48 ரன்களில் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். 

இறுதியாக சுமித், பட்லர் விக்கெட்டை இழக்காமல் அதிரடியாக விளையாடினார்கள். அவர்களின் அதிரடியில் 18 ஆவது ஓவர்லயே 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்கள். ஸ்மித் 31 ரன்களும் பட்லர் 22 ரன்களும் எடுத்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajasthan Beat Punjab by 7 wickets


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->