இடம் கிடைக்காத விரக்தி! உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்த இந்திய சுழற்பந்துவீச்சாளர்!   - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா சர்வதேச மற்றும் உள்நாட்டு தொடர்களில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார். 

பிரக்யான் ஓஜா இந்திய அணிக்காக கடந்த 2008ஆம் ஆண்டு அறிமுகமானார். ஐபிஎல் போட்டிகளின் மூலம் இந்திய அணிக்கு கிடைத்த முக்கிய வீரர்களில் பிரக்யான் ஓஜாவும் ஒருவர். 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி இவரை விளையாட வைத்தது. அதன் பலனாக இந்திய ஒருநாள் அணியில் உடனடியாக இடம்பிடித்தார். பின்னர் டெஸ்ட் போட்டிகளில் 2009ம் ஆண்டு ஸ்ரீலங்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமானார். 20 ஓவர் போட்டிகளில் பங்களாதேஷ் அணிக்கெதிராக 2009 ஆம் ஆண்டு அறிமுகமானார். 

டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடினாலும் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் போட்டி கடுமையாக இருந்ததால் அவருக்கான வாய்ப்பு தொடர்ச்சியாகக் கிடைக்கவில்லை. டெஸ்ட் போட்டியில் மிக சிறப்பாக விளையாடினாலும் ஹர்பஜன் சிங், அமித் மிஸ்ரா இரண்டு முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இருந்ததால், இவர் வெளியில் உட்கார வைக்கப்பட்டார். பின்னர் அஸ்வின்வருகையினால் ஹர்பஜன் இடம் கேள்வி குறியாக, ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்தினால் ஓஜாவின் இடமும் கேள்விக்குறியானது. 

24 டெஸ்ட்களில் மட்டுமே விளையாடியுள்ள பிரக்யான் ஓஜா 113 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிறந்த பந்துவீச்சாக 47 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். அதேபோல இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை 7 முறையும் ஒரு ஆட்டத்தில் 10 விக்கெட்டுகளை ஒரு முறையும் அவர் வீழ்த்தி உள்ளார். 18 ஒருநாள் போட்டிகளில் 21 விக்கெட்டுகளையும், 6  20ஓவர் போட்டிகளில் 10 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தினார். 92 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 89 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 2013 க்கு பிறகு அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

அவர் ஐபிஎல் அணிகளில் டெக்கான் சார்ஜர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளுக்காக விளையாடி உள்ளார். 2015ஆம் ஆண்டிற்கு பிறகு ஐபிஎல் அணிகளிலும் இடம் பெறாத அவர் தற்போது ஓய்வு பெறும் முடிவை அறிவித்துள்ளார். உலகில் அதிக விக்கெட் வீழ்த்திய முத்தையா முரளிதரனின் கடைசி விக்கெட்டான 800 ஆவது விக்கெட் பிரக்யான் ஓஜா என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pragyan Ojha retired from all forms cricket with immediate effect


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->