ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர்: போராடி தோல்வியடைந்த பிரக்ஞானந்தா..! - Seithipunal
Seithipunal


11-வது உலகக் கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடந்து வருகிறது. 08 சுற்றுகளை கொண்ட இந்த தொடரில் ஒவ்வொரு சுற்றிலும் 02 ஆட்டங்கள் நடத்தப்படும். இந்த ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா தோல்வி அடைந்துள்ளார். 

இவர் 04-வது சுற்றில் டைபிரேக்கர் போட்டியில் போராடி தோல்வி அடைந்துள்ளார். ரஷ்யாவின் டெளபவுடன் மோதிய 04-வது சுற்று டிராவில் முடிந்ததால் டைபிரேக்கர் முறையில் போட்டி நடத்தப்பட்டது.

நேற்று 04-வது சுற்றின் 02-வது ஆட்டம் நடந்தது. இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, ரஷியாவின் டேனில் துபோவை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 30-வது நகர்த்தலில் டிரா செய்தார். முதலாவது ஆட்டமும் டிரா ஆனதால் வெற்றியாளரை தீர்மானிக்க இவர்கள் இடையிலான மோதல் டைபிரேக்கருக்கு நகர்ந்தது. 

மறுபுறம் உலக ஜூனியர் சாம்பியனான இந்தியாவின் பிரணவ், உஸ்பெகினிஸ்தானின் நோடிர்பெக் யாகுபோவுடனும், கார்த்திக் வெங்கட்ராமன், வியட்னாமின் லி குவான் லியாமுலியாமுடனும் தோற்று வெளியேறியுள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Praggnanandhaa lost the FIDE World Cup Chess Series


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->