#சற்றுமுன் || மோசமாக கையில் பட்ட அடி.! வலியில் துடித்த ரிஷப் பண்ட்.! #வீடியோ - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடன் டெஸ்ட் தொடர் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போதுவரை 2 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளது. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்து இருந்தது. நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது முதல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

மார்னஸ் லபுஸ்சேன் 91 ரன்கள் சேர்த்த போது ஜடேஜா பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய ஸ்டீவன் சுமித் 131 ரன்கள் எடுத்த போது ரன் அவுட் ஆகினார். டிம் பெய்ன் (C) ௧ ரன்னுக்கும், கம்மின்ஸ் மற்றும் நாதன் லயன் டக் அவுட் ஆக, மிட்செல் ஸ்டார்க் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹேசில்வுட் 1 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அனைத்து விக்கெட்களையும் இழந்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 338 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 4 விக்கெட்களும், பும்ரா மற்றும் சைனி தல 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா (26 ரன்கள்) தனக்கே உரித்தான சில அதிரடி ஷாட்களை அடித்து வந்தார். ஆனால் ஹேசில்வுட் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சுப்மான் கில் தனது முதல் அரை சதம் அடித்து அவுட் ஆகினார்.

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்து இருந்தது. இந்நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரஹானே 5 ரன்களிலும் புஜாரா 9 ரன்களிலும் களத்தில் இறங்கினர்.

மிதமாக ஆடிய ரகானே 22 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹனுமா விஹாரியும் 4 ரன்னில் ரன் அவுட் ஆகினார். இந்திய அணி தற்போது, 4 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 49 ரன்னும், பண்ட் 35 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் ஆடி வருகின்றனர்.

இந்நிலையில், பேட் கம்மிஸ் வீசிய பந்தில் பண்ட் இடது கையில் பட்டது. கையில் பட்ட அடுத்த நொடியே வலியில் துடிக்க ஆரம்பித்த பண்ட்க்கு உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரின் முகபாவனைகள் அவருக்கு ஏற்பட்ட வலியை அனைவருக்கும் உணர்த்தியது. இருப்பினும் அவர் தற்போது களத்தில் ஆடி வருகிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PANT INJURI


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->