பாகிஸ்தான்,தென் ஆப்பிரிக்கா அணிகள் கிரிக்கெட் வரலாற்றில் கடந்து வந்த பாதைகள்.! தகவல்கள் உள்ளே.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 30 ஆவது லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாட உள்ளன. இந்த ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதுவரை உலக்கோப்பை போட்டியில் இரு அணிகள் பற்றிய தகவல்கள்.

டெஸ்ட் போட்டிகளில் இதுவரை     26  போட்டிகள் விளையாடி 4 வெற்றி பாகிஸ்தான்., 15  வெற்றி தென்னாப்பிரிக்கா          
ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 78 போட்டிகள் விளையாடி 27 வெற்றி பாகிஸ்தான்.,  50   வெற்றி தென்னாப்பிரிக்கா      
டி 20 போட்டிகளில் இதுவரை    14 போட்டிகள் விளையாடி 6 வெற்றி பாகிஸ்தான்.,     8  வெற்றி தென்னாப்பிரிக்கா 

உலகக்கோப்பையில் இதுவரை:-
தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி .  தென் ஆப்பிரிக்கா 3 முறை வென்றுள்ளது. பாகிஸ்தான் 1 முறை வெற்றி பெற்றுள்ளது. 

உலகக்கோப்பை போட்டிகளில் சந்தித்துக் கொண்ட போது தென் ஆப்பிரிக்கா அடித்த அதிகபட்ச ரன்கள் 243. பாகிஸ்தான் அடித்த அதிகபட்ச ரன்கள் 242. அதே போல, 173 ரன்கள் தான் பாகிஸ்தான் அடித்த குறைந்தபட்ச ரன்கள், 202 ரன்கள் தென் ஆப்பிரிக்கா அடித்த குறைந்தபட்ச ரன்கள்.

தற்போது இரு அணிகளும் புள்ளிப் பட்டியலில் தென்னாபிரிக்க அணி 6 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி 4  தோல்வியை சந்தித்துள்ளது ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை இத்துடன் புள்ளி பட்டியலில் 3  புள்ளிகள் பெற்று  8  இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி 5 ஆட்டங்களில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி 3 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது இதையடுத்து புள்ளிப் பட்டியலில் மூன்று புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்காஅணி உத்தேச வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது :-

தென்னாப்பிரிக்கா:
குயின்டன் டி காக்(wk), ஹாசிம் ஆம்லா, ஐடென் மார்க்ரம், பாப் டு ப்ளஸிஸ்(c), ராசி வான் டெர் டசன், டேவிட் மில்லர், அண்டில் பஹ்லுக்குவாயா, கிறிஸ் மோரிஸ், காகிஸோ ரபாடா, லுங்கி நிகிடி, இம்ரான் தாஹிர்.

பாக்கிஸ்தான் அணி வீரர்கள்: 
இமாம்-உல்-ஹக், பாகார் சமன், பாபர் அசாம், முஹம்மத் ஹபீஸ், ஹாரிஸ் சொஹைல், சர்ப்ராஸ் அஹ்மத்(c&wk), இமாட் வாசிம் /ஆசிப் அலி, வஹாஸ் ரியாஸ், ஷதாப் கான், முஹம்மத் அமீர், ஹசன் அலி/முஹம்மத் ஹஸ்னின்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pakistani and south african teams in the history of cricket. Information inside


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->