முதலிடத்தில் பாகிஸ்தான்.., கடைசி இடத்தில் இந்தியா!! பரிதாப நிலையில் இருக்கும் அணி!! - Seithipunal
Seithipunal


உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கடந்த மாதம் 30 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. மொத்தம் 45 போட்டிகளில் நேற்று வரை 30 போட்டிகள் முடிவடைந்துள்ளன . நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் தலா 6 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளது.

இதுவரை 5 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி அதில் 4 போட்டியில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து, இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.
 
இந்நிலையில், ஜூன் 23 ஆம் தேதி வரை நடந்து முடிந்த 30 உலக கோப்பை போட்டிகளிலும் மோசமான பீல்டிங் என்ற வகையில் அதிக கேட்ச் கோட்டை விட்ட அணிகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. 

அதிக கேட்ச் கோட்டைவிட்ட அணிகளின் பட்டியல்

26 கேட்ச்களில் 14 கேட்ச்களை கோட்டை விட்டு பாகிஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது. இது 35 சதவிகிதமாகும்.

42 கேட்ச்களில் 10-ஐ கோட்டை விட்டு இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்தில் உள்ளன. 

தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் பட்டியலின் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.

15 கேட்சுகளில் 1-ஐ மட்டுமே கோட்டைவிட்டு இந்திய அணி பட்டியலில் கடைசி இடத்தில் இந்தியா உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pakistan in first place


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->