பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு விதிக்கப்பட்ட தடை! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்கள் பிரியாணி சாப்பிடக்கூடாது என அந்த அணியின் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராகவும், தேர்வு குழு தலைவராகவும் அண்மையில் பதவியேற்ற மிஸ்பா உல் ஹக், அணியை வலுப்படுத்தும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக வீரர்களின் உணவு விவகாரத்தில் கை வைத்துள்ள அவர், எண்ணெய்யால் செய்யப்பட்ட இறைச்சி உணவு மற்றும் இனிப்பு பதார்த்தங்களை வீரர்கள் அறவே தொடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

முக்கியமாக, பாகிஸ்தான் அணியில் உள்ள வீரர்கள் யாரும் பிரியாணி உணவு சாப்பிடக்கூடாது என அவர் கட்டளையிட்டுள்ளதாகவும் தெரிகிறது. நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் அணி, அந்த போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் வீரர்கள் பீட்சா, பர்கர் என சாப்பிட்டதாகவும், அதனாலேயே இந்தியாவிடம் தோற்றதாகவும் கூறி சமூக வலைதளங்களில் விமர்சன வீடியோ பரவி இருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pakistan coach new announcement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->