அணியிலிருந்தே தூக்கி எறியப்பட்ட கேப்டன்! புதிய கேப்டன்களை அறிவித்தது பாகிஸ்தான்!  - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து சர்பராஸ் அஹமட் நீக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் அணியிலிருந்தும் நீக்கப்பட்டு உள்ளார். இது பாகிஸ்தான் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் பாகிஸ்தான் அணியின்  கேப்டனாக இருந்தவர் சர்பராஸ் அஹமட். இவருடைய ஆட்டம் சிறப்பாக இல்லாமையாலும், அணி வழிநடத்துவதில் தொய்வு ஏற்பட்டதாலும் அவரை நீக்குவது குறித்து நீண்ட நாட்களாக பரிசீலித்து வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் இன்று அதனை செய்துள்ளது. 

இவரது தலைமையில் உலக கோப்பையில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு கூட முன்னேறாமல் லீக் சுற்றோடு வெளியேறியது.  இதனால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பயிற்சியாளர் உள்ளிட்ட அனைவரையும் நீக்கியது. இதனை அடுத்து புதிய பயிற்சியாளர் மற்றும் தேர்வுக் குழு தலைவராக அந்த அணியின் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக்கை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்தது. பொறுப்பேற்றுக்கொண்ட அவர் சர்பராஸ் மீது நம்பிக்கை வைத்து பாகிஸ்தானில் நடைபெற்ற ஸ்ரீலங்கா தொடருக்கான அணியின் கேப்டனாக நியமித்தார். ஒருநாள் தொடரை வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, 20 ஓவர் தொடரை 3 க்கு 0 என்ற கணக்கில் மண்ணை கவ்வியது. 

இதனையடுத்து அதிர்ச்சி அடை அடைந்த அவர்கள் இன்று ஆஸ்திரேலிய அணியுடனான தொடருக்கான அணியை தேர்வு செய்யும் பொழுது சர்பராஸ் அஹமதுவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்குவது எனவும், மேலும் அவரை அணியில் இருந்து நீக்குவது என முடிவு செய்யப்பட்டு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் போட்டிகள் கேப்டனாக அசார் அலியும், இருபது ஓவர் அணியின் கேப்டன் ஆக பாபர் அசாம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு நாள் போட்டிக்கான அணியின் கேப்டன் அறிவிக்கப்படவில்லை. 

கேப்டன் மட்டுமில்லாமல் வீரராக கூட அணியில் இடம் கொடுக்காமல் சர்பராசை உடன் வைத்துக் கொண்டே இதனை அந்த அணி நிர்வாகிகள் அறிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட சப்ராஸ் அகமது எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி. புதிய கேப்டன்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan captain changed for upcoming Australia tour


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->