மண்ணை கவ்விய இந்திய அணி.! கெத்து காட்டிய நியூசிலாந்து.!! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்தில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 ஓவர் தொடரை வென்ற நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஹாமில்டனில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஆக்லாந்தில் நடைபெறும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்தது.

அதன்பிறகு களத்தில் இறங்கிய இந்திய அணி, அனைத்து விக்கெட்களையும் இழந்து 251 ரன் எடுத்து தோல்வி அடைந்தது. இந்திய அணிக்கு எதிரான 2 ஆவது ஒரு நாள் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 2 -0 என்ற கணக்கில் நியூசிலாந்து வென்று தொடரை கைப்பற்றியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one day matchi new zealand win


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->