பெண்கள் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி.! ஆனால்.,  - Seithipunal
Seithipunal


ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்திய அணியும் அர்ஜென்டினா அணியும் மோதின. முதல் கால் பகுதியின் இரண்டாவது நிமிடத்தில் இந்திய அணி முதல் கோலை அடித்தது. 

இரண்டாவது கால் பகுதியில் அர்ஜென்டினா அணி 2 கோல்களை அடித்து அசத்தியது. அதனைத் தொடர்ந்து மூன்றாவது மற்றும் நான்காவது கால் பகுதியில் இரு அணிகளும் கோல்களையும் எடுக்கவில்லை.

இறுதியில் அர்ஜென்டினா அணி 2க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்த இந்திய அணி, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் கலந்துகொள்ள இருக்கிறது.

இதேபோல, முன்னதாக ஆண்கள் ஹாக்கி அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்த இந்திய ஆண்கள் இந்திய அணியும், வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் ஆட உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஒலிம்பிக் போட்டியில் இந்தியா:

* பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். 

* மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிட்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி வி சிந்து வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

* இன்று நடைபெற்ற குத்துசண்டை போட்டியில் இந்தியாவுக்கு லவ்லீனா வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.

* மல்யுத்த அரையிறுதிப் போட்டியில், கஜகஸ்தான் நாட்டு வீரரை எதிர்கொண்ட இந்திய மல்யுத்த வீரர் ரவிக்குமார் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் உறுதியாகியுள்ளது. 

* மல்யுத்தம் ஆடவர் 86 கிலோ எடைப்பிரிவு அரையிறுதி போட்டியில் அமெரிக்க வீரரிடம் 10 -0 என்ற கணக்கில் தீபக் புனியா அதிர்ச்சி தோல்வியை தழுவினார். இருப்பினும், வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் தீபக் புனியா விளையாட இருக்கிறார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

olympic indian women hockey team loss in semi final


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->