அடுத்தடுத்து வெளியேறிய இந்திய வீராங்கனைகள்.! இறுதி போட்டியில் பதக்கத்தை பறிகொடுத்த கமல்ப்ரீத் கவுர்.! - Seithipunal
Seithipunal


ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது. பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

அவரைத் தொடர்ந்து மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிட்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி வி சிந்து வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதேபோல் இந்திய ஹாக்கி ஆடவர் மற்றும்  மகளிர் அணி ஒரே நேரத்தில் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்தது.

இதில், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அரையிறுதி போட்டியில் இன்று தோல்வியடைந்து. இருப்பினும் வெண்கல பதக்கத்தை வெல்வதற்கான போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி மோத உள்ளது.

இந்நிலையில், இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதி சுற்று போட்டியில் இந்தியா உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், இந்தியா சார்பில் பங்கேற்ற அன்னு ராணி, 50.35 மீ, 53.19 மீ, 54.04 மீ தூரம் எறிந்து 14வது இடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.

இதேபோல பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் 63.70 மீட்டர் தூரம் வீசி 6-வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை தவறவிட்டார். 

ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில், மகளிர் 62 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சோனம் மாலிக் அவர்களும் அதிர்ச்சி தோல்வியை தழுவியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

olympic indian 3 player loss


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->